டாடாவின் அவதாரம்!!
உலகளவில் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிறுவனம் ஆப்பிள், இதன் ஐபோன்கள் உலகம் முழுவதும் பெரிய ஹிட் அடித்த தயாரிப்பாகும். இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இந்த ஐபோன்கள் தயாராகின்றன. இந்த சூழலில் டாடா குழுமத்தில் இருந்து டாடா எலெக்ட்ரானிக்ஸ் என்ற பிரிவில் புதிய உற்பத்தி ஆலை ஓசூரில் துவங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும் பூமி பூஜைகள் நடந்ததாக கூறப்படுகிறது,
துவக்கத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் டாடா குழுமத்தின் ஆலை துவங்கப்பட்டாலும் படிப்படியாக எட்டாயிரம் கோடி ரூபாய் வரை இந்த ஆலையில் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் தயாரித்துத் தரும் பணியை இந்த ஆலை செய்ய உள்ளது. மேலும் இந்த ஆலையில் 90 விழுக்காடு பெண் ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். என்றும் சுமார் 18 ஆயிரம் பணியாளர்கள் இந்த ஆலையில் பணியாற்ற இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூரை அடுத்து தமிழகத்தில் அமையும் இரண்டாவது ஆப்பிள் ஆலை இது என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த செல்போன்கள் உற்பத்தியாகும் நிலையில், ஐபோன்களின் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது