மணப்புரம் தங்கக் கடன் நிறுவனம் கைமாறுகிறதா?
கேரளாவை பூர்விகமாககொண்டு இயங்கி வரும் மணப்புரம் தங்க நகைக் கடன் நிறுவனத்தின் பங்குகளை பைன் கேப்பிட்டல் என்ற நிறுவனம் வாங்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. தங்க நகைக்கடன்கள் வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்து வரும் நிலையில் அதை சமாளிக்க முடியாமல் மணப்புரம் நிறுவனம் வெளியேற வாய்ப்பிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மணப்புரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் நந்தகுமார் வசம் 35.25% பங்குகள் உள்ளன. அவரின் பங்குகளை விற்கப்போவதில்லை என்றும் அவர் மறுத்துள்ளார். தனது தந்தை கவனித்து வந்த தங்க நகைக்கடன் வழங்கும் திட்டத்தை நந்தகுமார் கடந்த 1992-ஆம் ஆண்டு கையில் எடுத்தார். இந்த நிலையில் மணப்புரம் நிறுவனத்தின் 10 முதல் 11% பங்குகளை பைன் நிறுவனம் வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. 6,289 கோடி ரூபாய் அளவுக்கு 47 %பங்குகள் உள்ளன. கடந்த 20123 ஆம் ஆண்டு ஜூலையில் அதானி கேப்பிடல் நிறுவனத்தின் பங்குகளில் பைன் நிறுவனம் முதலீடு செய்திருந்தது. மேலும் 360 ஒன், எல்அண்ட்டி ஃபைனான்ஸியல் ஹோல்டிங்கிஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கிகளில் பைன் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. மணப்புரம் நகைக்கடன் நிறுவனத்தை நந்தகுமாரின் மகள் டாக்டர் சுமித்தா கையில் எடுக்க இயக்குநர்கள் குழுவில் ஆர்வம் இல்லை என்று கூறப்படுகிறது. செப்டம்பர் வரையிலான காலாண்டில் மணப்புரம் நிறுவனத்தின் மதிப்பு 11,557 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த காலாண்டில் 12,002 கோடி ரூபாயாகவும் இருந்தது.