பஜாஜ் மின்சார ஸ்கூட்டர்களுக்கு அமோக வரவேற்பு..

இந்தியாவில் பஜாஜ் மின்சார ஸ்கூட்டர்களுக்கு பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு முதல் அந்நிறுவனம் மின்சார பைக்குகளை உற்பத்தி செய்து வருகிறது. குறிப்பிட்ட இந்த நிறுவனத்தின் பதிவுகள் மட்டும் ஓராண்டில் இருமடங்காக உயர்ந்துள்ளன. ஓலா, டிவிஎஸ், ஏதர் ஆகிய நிறுவனங்களும் குறிப்பிடத்தகுந்த வாகனங்களை விற்றுள்ளன வாஹன் என்ற மத்திய அரசின் தரவுகளின்படி, பஜாஜ் ஆட்டோவின் மின்சார் ஸ்கூட்டர்கள் பதிவு 109 விழுக்காடு உயர்ந்து 2.24லட்சமாக 2025 நிதியாண்டில் உயர்ந்துள்ளது. 10விழுக்காட்டில் இருந்து 2025 நிதியாண்டில் 20.5விழுக்காடாக பஜாஜ் நிறுவனத்தின் சந்தை உயர்ந்துள்ளது. டிவிஎஸின் வளர்ச்சி 21விழுக்காடாக உள்ளது. ஏதர் 11 விழுக்காடாக உள்ளது.
ஒரு காலத்தில் மின்சார பைக்குகள் மிகவும் விலையுயர்ந்ததாக இருந்த நிலையில் தற்போது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ரகம் உயர்ந்த ரக பைக்குகள் மற்றும் ஒருலட்சம் ரூபாய்க்கு கீழான பைக்குகளாகும். ஓலா நிறுவனத்தின் விற்பனை 36 விழுக்காடு குறைந்துள்ளது அந்நிறுவனத்துக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. விற்பனை சரிந்தாலும் ஓலா நிறுவனம்தான் இப்போது வரை அதிக பைக்குகள் விற்ற மின்சார பைக் நிறுவனமாக உள்ளது. டிவிஎஸ் நிறுவன பைக்குகள் ஓராண்டில் 7 ஆயிரம் மின்சார பைக்குகளை மட்டுமே விற்றுள்ளன. ஓலா, டிவிஎஸ் மோட்டார் பைக்குகளுக்கு அடுத்த இடத்தில்தான் பஜாஜ் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தை ஏதர் நிறுவனம் பிடித்துள்ளது.