பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் அப்டேட்..
பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் அண்மையில் ஐபிஓ வெளியிட்ட நிலையில் முதலீட்டாளர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். 114% அளவுக்கு அந்நிறுவன பங்குகள் விற்கப்பட்டுள்ளன. தேவைப்பட்ட தொகையை விட 64 மடங்கு அதிகமாக முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் நிதியை கொட்ட முன்வந்தனர். இதற்கு முன்பு கோல் இந்தியா, டாடா டெக்னாலஜீஸ் நிறுவனங்கள்தான் அதிக முதலீடுகளை ஈர்க்கும் போட்டியில் இருந்துவந்தன கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அடகுகடன் அளித்து வருவதால் அந்நிறுவனத்தின் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் சொத்து நிர்வாகம் செய்யும் பட்டியலில் 57 % கடன்களாக உள்ளன. 2017-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை 90 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை அந்நிறுவனம் நிர்வகித்து வருகிறது. அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அதுல் ஜெயின்தான் இந்த குழுவை திறம்பட வழிநடத்துகிறார். அடுத்த கால் அல்லது அரை நூற்றாண்டில் வீடுகள் கட்டும் துறைக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளதாகவும் , வீட்டு வசதி மற்றும் அது சார்ந்த கடன்களை நிர்வகிக்கவே தனியாக ஆட்களை தேர்வு செய்துள்ளதாகவும் அதுல் தெரிவிக்கிறார். வராக்கடன் குறைப்பதும், npa அளவுகள் சீராக வைப்பதும், தொழில்நுட்பமும்தான் தங்கள் நிறுவனத்தை தனித்துவமாக வைத்திருப்பதாகவும் அதுல் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.