பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் ஐபிஓவுக்கு அமோக வரவேற்பு..

பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பிட்ட ஐபிஓவை வாங்க நடந்த முதல் நாள் ஏலத்தில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் ரீட்டெயில் பிரிவில் அலாட்மண்ட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மங்கியுள்ளன. ஷேர் ஹோல்டர்ஸ் பிரிவின் மூலம் அதிக அலாட்மன்ட்கள் பெற முதலீட்டாளர்கள் முயற்சித்து வருகின்றனர். 6560கோடி ரூபாய் மதிப்புள்ள ஆரம்ப பங்கு வெளியீட்டில், பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குதாரர்கள் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் பங்குதாரர்களுக்கு என 500 கோடி ரூபாய் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு முன்பு பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வைத்திருப்போர் பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்கள் பிரிவில் முதலீடு செய்வோர் , ஷேர் ஹோல்டர் மற்றும் ரீட்டெயில் பிரிவு இரண்டையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், ஷேர் ஹோல்டர் பிளஸ் ஸ்மால் ஹெச்என்ஐ பிரிவு மற்றும் ஷேர் ஹோல்டர்ஸ் பிளஸ் பிக் எச்என்ஐ ஆகிய மூன்று பிரிவுகளையும் தேர்ந்தெடுத்தால் அதிக பங்குகளை நீங்கள் வாங்க முடியும். ஷேர் ஹோல்டர் பிரிவில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு ஏலம் கேட்பவர்களுக்குத்தான் பங்குகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. 2 லட்சம் ரூபாய் வரை 13 லாட்களில் 2ஆயிரம் பங்குகளை மட்டுமே வாங்க முடியும். அதேநேரம் ரீட்டெயில் பிரிவில் ஒரு முதலீட்டாளர் அதிகபட்சமாக 14,980 ரூபாய் அளவுக்கு வெறும் 270 பங்குகளை மட்டுமே வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.