பெரிய டீலை முடித்த நிறுவனம்..
தற்போது கூட்டு நிறுவனமாக இயங்கி வரும் பஜாஜ் அலியான்ஸ் நிறுவனத்தில், அலியான்ஸ் நிறுவனத்தின் 26 % பங்குகளை வாங்க பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனம் புதிய ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 24,180 கோடி ரூபாய்க்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10,400 கோடி ரூபாய் அளவுக்கான பங்குகளை பஜாஜ் வாங்கியிருப்பதால் மொத்த உரிமையும் இனி பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்துக்கே சென்றுவிடும். இந்த டீலுக்கு இந்திய போட்டி ஆணையத்தின் ஒப்புதல் தேவைப்படுவதுடன், ஐஆர்டிஏ எனப்படும் இந்திய காப்பீட்டுத்துறை ஒழுங்குமுறை அமைப்பின் ஒப்புதலும் தேவைப்படுகிறது. ஒரு பங்கு 4,808ரூபாய்24 பைசா என 11லட்சத்து 13 ஆயிரத்து 295 பங்குகள் விற்கப்பட்டுள்ளன. உயிர் காப்பீட்டுத்துறை பங்குகள் 2,654 ரூபாய் என்ற கணக்கில் 15லட்சத்து 22 ஆயிரத்து 161 பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. புதிய ஒப்பந்தத்தின் மூலம் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திடம் 75.01 % பங்குகளும், பஜாஜ் ஹோல்டிங்க்ஸ் 19.95%, ஜம்னாலால் சன்ஸ் நிறுவனம் 5.04% பங்குகளையும் வைத்துக்கொள்வர். 24 ஆண்டுகளாக கூட்டு நிறுவனங்களாக இயங்கி வந்த பஜாஜ் அலியான்ஸ் நிறுவனம் இனி தனித்தனியாக காப்பீடுகளை செய்யும் என்று கூறப்படுகிறது. 2024 நிதியாண்டில் மட்டும் பஜாஜ் அலியான்ஸ் பொதுவான காப்பீடு 33%உயர்வை கண்டுள்ளது சந்தை பங்களிப்பு 6.4%-ல் இருந்து 7.3%ஆக உயர்ந்துள்ளது. பஜாஜ் அலியான்ஸ் லைஃப் இந்சூரன்ஸின் தனி வணிகம் 21% உயர்ந்து 6,326 கோடி ரூபாயாக உள்ளது. சந்தை பங்களிப்பு 5.8%ஆக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனம் 1.09லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது.
