ஜுன் மாதத்தில் பஜாஜில் வரும் சிஎன்ஜிபைக்..,
இந்தியாவில் இருசக்கர வாகனங்களில் பிரபல நிறுவனமாக திகழ்வது பஜாஜ் இருசக்கர வாகனங்கள். இந்த நிலையில் பெட்ரோலுக்கு மாற்றாக சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் புதிய பைக்கை பஜாஜ் வரும் ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்த இருக்கிறது. நிறுவன பொதுப் பொறுப்பு நிதியாக 5 ஆண்டுகளுக்கு 5ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மைலேஜ் தான் முக்கியம் என்று இருக்கும் வாடிக்கையாளர்களுக்காக இந்த பைக் தயாராகிறதாம். பெட்ரோலுக்கு மாற்றாக சிஎன்ஜி டேங்க் வடிவமைக்க அதிக தொகை தேவைப்படுவதால் இது பெட்ரோல் பைக்கை விட அதிக விலை கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் 20 ஆண்டுகளில் 20 லட்சம் பல்சர் பைக்குகள் விற்கப்பட்டுள்ளதாக பஜாஜ் குழும அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் சிஎஸ்ஆர் எனப்படும் சமூக பொறுப்பு நிதியாக 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். திறன் மேம்பாடு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இந்த தொகை செலவிடப்பட்டுள்ளது. பணம் ஈட்டுவது மட்டுமின்றி பலருக்கும் திறமைகளை சொல்லித் தருவதற்காக பெஸ்ட் என்ற மையத்தையும் பஜாஜ் ஆரம்பித்தது. இதில் படித்து பலன் பெறுவோர் சமூக ரீதியில் நல்ல வருவாய் ஈட்டி வருகின்றனர். வங்கித்துறை, பைனான்ஸ் மற்றும் காப்பீட்டுத்துறையில் சான்றிதழ் படிப்புகளையும் அந்நிறுவனம் வழங்கி வருகிறது. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்காக இந்த பணிகளை செய்ய இருப்பதாக பஜாஜ் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.