டெபாசிட் பிரச்சனைக்கு முடிவா?
இந்தியாவில் நடுத்தர மற்றும் சிறு நிதி நிறுவனங்கள் டெபாசிட் பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். சூர்யோதய் சிறுநிதி நிறுவனம், எஸ் பேங்க்.ஜனா சிறு நிதி வங்கி ஆகியவை நிதிநுட்ப நிறுவனங்களுடன் கைகோர்த்து நிலையான முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. இதற்கு வங்கிக்கணக்கு கூட தேவையில்லையாம். வங்கிகள் ஒரு பக்கம் டெபாசிட்டை இழுத்து வரும் நிலையில், ஈக்விட்டிகள், பரஸ்பர நிதி, காப்பீட்டு திட்டங்கள் மக்களின் பெரும்பாலான நிதியை டெபாசிட்களாக மாற்றி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் கடந்த 6 ஆம் தேதி தரவுகளின்படி வழக்கமாக 11.1 விழுக்காடு டெபாசிட் வரும் நிலையில் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக இந்த டெபாசிட் தொகை 13 %ஆக உயர்ந்துள்ளது. டெபாசிட்டை ஈர்ப்பதற்காக பெரிய பெரிய வங்கிகளை விட சிறிய வங்கிகள் இரண்ரை விழுக்காடு வரை கூடுதல் வட்டி தர முன்வந்துள்ளன. டெபாசிட்களை ஈர்க்கவேண்டுமெனில் எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை போட்டு அதை திரும்பப் பெற அவகாசம் தரவேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெரிய வங்கிகளான ஆக்சிஸ், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் டிஜிட்டல் முறையிலும் பணத்தை அளிக்க முன்வருகின்றனர். டெபாசிட் பிரச்சனைகள் மெல்ல மெல்ல தீர்ந்து வருவதால் வங்கிகளுக்கு டெபாசிட் பிடிக்கும் அழுத்தம் குறையும் என்று நம்பப்படுகிறது.