திவாலாகும் நிலையில் உள்ள நிறுவனங்கள் கையை தூக்கவும்!!!!
எந்த நிறுவனங்கள் திவாலாகும் நிலையிலும்,நஷ்டத்திலும் இயங்குகின்றனவோ அவற்றையெல்லாம் பட்டியலிட்டு அவற்றை மூட ஏற்பாடுகளை செய்து மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஒரு நிறுவனம் திவாலாகும் நிலையில் இருந்தால் அது தொடர்பாக முறையான அறிவிப்பை இந்திய அரசுக்கும் திவால் விவகாரங்களை கவனிக்கும் அமைப்புக்கும் தெரியப்படுத்த வேண்டும். இதற்கென உள்ள பிரத்யேக குழு இது குறித்து 3 மாதங்கள் ஆய்வு நடத்தி முடிவுகளை தெரிவிக்கும். சுமார் ஒன்பது மாதங்களுக்கு மேல் நஷ்டத்தை சந்திக்கும் நிறுவனங்களை தேடிப்பிடித்து அவற்றை மூடும் முடிவுக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை இன்னும் அதிகரிக்கும் நோக்கில் நெடுநாட்களாக நிலப்பரிச்னை உள்ள பொதுத்துறை
நிறுவனங்களையும் முழுமையாக கைவிடவும் நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளது. நிலுவையில் உள்ள நிலப்பிரச்னைகளுக்கு பணம் கொடுத்து பிரச்னைகளை முடிக்கும் படியும், வழக்குகளுக்கு தீர்வு காணவும் மத்திய அரசு, நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.