BAT ஹாப்பி அண்ணாச்சி..
பிரபல பிரிட்டிஷ் அமெரிக்க புகையிலை நிறுவனமான BAT, ஐடிசி பங்குகளை விற்கப்போவதில்லை என்று கூறியதால் ஐடிசி நிறுவன பங்குகள் பெரிய மாற்றமின்றி முடிந்தன. ஐடிசி பங்குகள் குறித்து பாட் நிறுவனத்தின் மூத்த நிர்வாகியான டாடியு மாராக்கோ., பேட்டியும் அளித்திருக்கிறார். அதில், ஐடிசி நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பதில் பாட் நிறுவனம் மகிழ்ச்சியாகவே இருக்கிறது என்றார். மார்ச் 13 ஆம் தேதி பாட் நிறுவனம் 43.7 கோடி பங்குகளை தலா 400 ரூபாய் ஒரு பங்கு என்ற விலையில் 17,491 கோடி ரூபாய்க்கு விற்றது. இந்த பங்குகளை விற்றதன் மூலம் பாட் நிறுவனத்திடம் ஐடிசி நிறுவன பங்குகள் வெறும் 25.5 விழுக்காடாக குறைந்தது. கடந்த டிசம்பரில் பாட் வசம் 29 விழுக்காடு ஐடிசி நிறுவன பங்குகள் இருந்தன. 1900களில் பங்குச்சந்தைக்குள் நுழைந்த அந்நிறுவனம் ஆரம்பத்தில் சிகரெட் மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களை விற்று வந்தது. விற்றது போக மீதத் தொகையை 2025 டிசம்பர் வரை வைத்திருக்கப்போவதாகவும், 700 மில்லியன் பவுன்ட் அளவுக்கு இந்தாண்டு ஐடிசி நிறுவன பங்குகளை வைத்துக்கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு பிரிவான நிஃப்டி 50 மூன்று விழுக்காடு வரை சரிந்த பிறகு ஐடிசி நிறுவன பங்குகள் பத்தரை விழுக்காடு வரை சரிந்துள்ளன.