தடுமாறும் பாட்டா..

ஒருகாலத்தில் முன்னணி காலணி தயாரிப்பு நிறுவனமாக இருந்த பாட்டா, தற்போது விற்பனை மந்தமாகி, தொழில்நடத்தவே தடுமாறி வருகிறது. அந்த நிறுவனத்தின் வருவாய் 1.7%குறைந்துள்ளதுடன், 24 நிதியாண்டில் வளர்ச்சி 0.8விழுக்காடாகவும் இருந்தது தெரியவந்துள்ளது. அந்நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு வளர்ச்சி 2.2%உயர்ந்துள்ளது. வரிக்குபிந்தய தொகை கையிருப்பான ebitDA, ஆண்டுக்கு ஆண்டு 9% உயர்ந்துள்ளது. மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஊழியர்களுக்கான ஊதியம், உள்ளிட்டவை அந்நிறுவனம் எதிர்கொள்ளும் சவால்களாக உள்ளன.
தள்ளுபடி விற்பனை காலங்களில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. பெரியளவில் சரிவு இல்லை என்றாலும், fLOATZ மற்றும் பவர் ஆகிய பிரிவிகளில் முறையே 25, 9% வளர்ச்சி 3 ஆவது காலாண்டில் ஏற்பட்டுள்ளது. பெரிய வருமானம் இல்லை என்றபோதும் புதிதாக 17 கடைகள் 3 ஆவது காலாண்டில்திறக்கப்பட்டுள்ளன. பிராண்டை மேம்படுத்த அனைத்து பணிகளையும் செய்ய இருப்பதாக பாட்டா நிறுவனம் கூறியுள்ளது. மார்கெட் ஷேரை பிடிப்பது கடினமாக உள்ளது. பாட்டாவில் புதுமைகள் புகுத்தாமல் இருப்பதும் ஊழியர்களுக்கு பெரிய ஊக்கத் தொகை அளிக்காமல் இருப்பதும் சிக்கல்களாக கூறப்படுகிறது. கடந்த 2021 நவம்பர் 15 ஆம் தேதி ஒரு பங்கு 2ஆயிரத்து 229 ரூபாய் 60 காசுகள் என்ற புதிய உச்சத்தில் இருந்த பாட்டா நிறுவன பங்குகள் தற்போது 42%விழுக்காடு குறைந்துள்ளது.