பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவன லாபம் இவ்வளவா?

பிரபல முதலீட்டாளர் வாரன் பஃப்பெட் நடத்தி வரும் பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்துக்கு அண்மையில் காப்பீட்டு துறை சார்ந்த முதலீடுகளில் பெரிய லாபம் கிடைத்தது இதனால் அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பும் புதிய உச்சங்களை தொட்டன. அந்த நிறுவனத்தின் கிளாஸ் ஏ பங்குகள் 4 விழுக்காடு உயர்ந்து 7.47லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. கிளாஸ் பி பங்குகள் 4.1% உயர்ந்து 498.42 அமெரிக்க டாலர்களாக உள்ளது. அந்நிறுவனத்தின் நான்காவது காலாண்டு லாபம் 189 வணிகங்களில் 71விழுக்காடு உயர்ந்து 14.53 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. அந்த நிறுவனத்தின் முழு ஆண்டு லாபம் மட்டுமே 27 %உயர்ந்து 47.44 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. கெய்கோ நிறுவன புதிய நடவடிக்கைகளால் 2,300 பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டது. பெர்க்ஷைர் நிறுவனத்தின் செயல்பாடுகள், ரயில்வே, சாலை மார்க்கமான துறைகள், ஆற்றல், சில்லறை மற்றும் சேவை சார்ந்த வணிகங்களில் இடம்பிடித்துள்ளன. 94 வயதாகும் வாரன் பஃப்பெட் கடந்த 11965 ஆம் ஆண்டு பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தை நிறுவினார். பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கிரெக் அபெல் இயங்கி வருகிார். அவருக்கு வயது 62, அவர் பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.