சாதனை புரிந்த பெர்க்ஷைர் ஹாத்வே..
உலகின் முன்னோடி முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட்டின் பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனம் டெக் நிறுவனம் இல்லாத ஒரு நிறுவனமாகும். சந்தை மதிப்பின் அடிப்படையில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட டெக் நிறுவனமல்லாத நிறுவனம் என்ற பெருமையை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. புதன்கிழமை நிலவரப்படி அமெரிக்க பங்குச்சந்தையில் பெர்க்ஷைர் நிறுவனத்தின் பங்குகள் 3.96 விழுக்காடு விலை உயர்ந்து ஒரு பங்கு 464.59 அமெரிக்க டாலர்களாக உள்ளது. அமெரிக்காவின் பிரபல டெக் நிறுவனங்களான ஆப்பிள், என்விடியா, மைக்ரோசாஃப்ட், ஆல்ஃபபெட், அமேசான், மெட்டா நிறுவனம் ஆகியவை மட்டுமே இதுவரை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட டெக் நிறுவனங்களாக உள்ளன. இந்தாண்டில் மட்டும் அந்நிறுவனத்தின் பங்குகள் 28 விழுக்காடு உயர்ந்துள்ளன. அமெரிக்க பங்குச்சந்தையின் சரிவு காணப்பட்ட போதிலும் இந்த நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதன் விளைவாக வியாழக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளும் பெரிய பாதிப்பை சந்தித்தது. ஜப்பானின் நிக்கேய், ஹாங்காங்கின் ஹாங் சாங், தைவானின் தைவான் வெயிட்டட் இன்டக்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான ஆசிய சந்தைகள் சரிவை கண்டன.
இந்திய பங்குச்சந்தைகளில் ஒன்றான தேசிய பங்குச்சந்தையில் கடந்த புதன்கிழமை மிகப்பெரிய புதிய உச்சம் தொடப்பட்டது. அதாவது நிஃப்டி 25,114 புள்ளிகள் என்ற அளவில் இருந்தது. இந்திய பங்குச்சந்தைகள் உயர்வதற்கு ஐடி நிறுவன பங்குகள் பெரிதும் உதவின.