அதிகம் விற்கப்பட்ட ஆடி கார்கள்…
ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி கார், விற்பனை கடந்தாண்டில் 89 விழுக்காடு உயர்ந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் அந்நிறுவனம் வெறும் 4,187 ஆடி கார்களை விற்றுள்ளது. ஆனால் 2023-ல் மட்டும் 7931 கார்கள் விற்கப்பட்டுள்ளன. கியூ3 என்ற விளையாட்டு வகை வாகனம், q8 E-TRON , Q8 Sportback e-tron ரக வாகனங்கள்,சந்தையில் அதிகம் விற்கப்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமின்றி ஆடி A4, A6,q5ஆகிய ரக கார்களுக்கும் வரவேற்பு அதிகளவில் இருக்கிறது. Q7, Q8, A8 L, S5 Sportback, RS5 Sportback, RS Q8, e-tron GTஆகிய கார்களுடன் RS e-tron GT ரக கார்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்தாண்டு ஆடி கார்கள் விற்பனைக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்துவிட்டதாக அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் பல்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
ஷோரூம்களில் அதிக வாடிக்கையாளர்கள் வருகை மற்றும் போதுமான பழுதுநீக்கும் இடங்கள் மற்றும் விற்பனையகங்கள் விற்பனையை அதிகரித்துள்ளன. இந்தாண்டும் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 17 வகை கார்களை விற்பதால் ஆடி நிறுவனத்தின் விற்பனை கணிசமாக உயர்ந்திருக்கிறது. 4-ல் ஒரு வாடிக்கையாளர் ஆடி காரை மீண்டும் மீண்டும் வாங்குவதாகவும் பல்பீர் சிங் தெரிவித்துள்ளார். விற்பனையை அதிகரிக்கவும், டிஜிட்டல் மயப்படுத்தவும் இந்தாண்டில் இந்தியாவில் ஆடி கார்களின் விற்பனையை அதிகரிக்கவும் பணிகளை செய்து வருவதாக பல்பீர் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு கார்களை ஏற்றி வரும் கப்பல்கள் தாமதமாவதால் இந்தியாவில் விற்பனை லேசாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்பீர் சிங் தெரிவித்துள்ளார்.