பைடன் ஓகே..டிரம்ப் வேணா–சொல்கிறார் புடின்..
ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின்புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய புடின், அமெரிக்க அதிபராக ஜோ பைடன்தான் வரவேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப்பை விட பைடன் அனுபவம் வாய்ந்தவர் என்று தெரிவித்த புடின், அமெரிக்க அதிபராக யார் நியமிக்கப்பட்டாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் வர உள்ள நிலையில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி இடையே போட்டி நிலவுவதை குறிப்பிட்டார். பைடனின் உடல்நிலை குறித்து புடினிடம் கேள்வி எழுப்பிய போது, நான் ஒன்றும் மருத்துவர் இல்லை என்று புடின் பதில் அளித்தார். கடந்த 2022-ல் இதே புடன், பைடனையும்,அவரின் கொள்கைகளிலும் தவறு இருப்பதாக கூறியிருந்தார். அமெரிக்க அரசுடன் ரஷ்யா நடத்தி வரும ்பேச்சுவார்த்தையின் போது போர்க்குற்றங்கள் குறித்தும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.