அதிகம் சம்பாதிப்போருக்கு அதிக வரி போடும் பைடன்..
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த திங்கட்கிழமை பட்ஜெட் ஒன்றை ஒதுக்கியிருக்கிறார். அதன்படி 3 டிரில்லியன் டாலர்கள் பற்றாக்குறையை சரி செய்ய முடியும். அதாவது அதிகம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் மற்றும் வசதி படைத்தோருக்கு ஒரு வகை வரியும், சாதாரண மக்களுக்கு ஒரு வரியும் போடுவதே அந்த திட்டம். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை வாயடைக்கும் வகையில் புதிய திட்டத்தை பைடன் கூறியிருப்பது வரவேற்பை பெற்று வருகிறது. நிறுவனங்களுக்கு கூடுதலாக 5 டிரில்லியன் வரி வசூலிக்கும் வகையில் புதிய திட்டம் உள்ளது. இது அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான நிதியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கார்பரேட் வரியை உயர்த்த பைடன் திட்டமிட்டுள்ளார். அதாவது தற்போதுள்ள 21 விழுக்காடு வரிக்கு பதிலாக 28 விழுக்காடு வரி உயரப்போகிறது. காரப்ரோட் குறைந்தபட்ச வரி 15 விழுக்காடுக்கு பதிலாக 21 விழுக்காடு வசூலிக்கப்பட இருக்கிறது. இப்படி வரி உயர்த்துவதன் மூலம் வெள்ளை மாளிகைக்கு வரி வருவாய் 137 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும். கார்பரேட் ஸ்டாக் பைபேக் எனப்படும் பங்கு தரும்பப் பெறும் நடவடிக்கைக்கு 1 விழுக்காடு சர்சார்ஜும் வசூலிக்கப்பட இருக்கிறது. ஆண்டுக்கு 4 லடசம் டாலருக்கு குறைவாக சம்பாதிப்போருக்கு வரி உயர்த்தப்போவதில்லை என்று கூறியுள்ள பைடன், அதற்கு மேல் உள்ளோருக்கு 39.6 விழுக்காடு வரி உயர்த்தத் திட்டமிட்டுள்ளார். கோடீஸ்வரர்களுக்கான வரி 25 விழுக்காடாத உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. 100மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் உள்ளோருக்கு இந்த வரி பொருந்தும். பணவீக்கத்தை குறைக்கும் நடவடிக்கைக்கு IRS என்று பெயரிடப்பட்டுள்ளது. இதையும் அமல்படுத்த பைடன் துடிக்கிறார். ஓய்வூதியத் திட்டங்களை உயர்த்தும் பைடன், பைடனின் பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பைடனின் இந்த புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் 10 லட்சம் பேருக்கு வேலை போகும் என்று டிரம்ப் ஆதரவாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்