கண்டபடி திட்டு வாங்கிய பிறகு ஆதரவுக்கரம் நீட்டும் பெரிய நிறுவனங்கள்….
உலகளவில் பொருளாதார மந்தநிலை உள்ளதால் தங்கள் தொழிலை நடத்த முடியாத நிலையில் பல நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. சிறியது முதல் மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனங்களும் இந்த சிக்கலில் தப்பவில்லை. இந்திய சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை தொடர முடியாத போது அவர்களிடம் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக அளித்துவிடுகின்றனர் தற்போதும் அதே பாணியில் சிறு நிறுவனங்கள் தங்களிடம் பணியில் இருந்தவர்களை நீக்கும்போது அளித்துள்ளன. மேலும் பெரிய நிறுவனங்களான பேஸ்புக்கின் மெட்டா, டிவிட்டர் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட ஊழியர்களின் மருத்துவ காப்பீட்டை இந்தாண்டு காப்பீட்டு சந்தா முடியும் வரை அளிக்க முன்வந்துள்ளன. இந்த வகையான நம்பிக்கை வார்த்தைகளை அவர்களாக வெளியிடவில்லை. மாறாக சமூக வலைதளங்களில் தங்கள் அன்பானவர்களுக்கு வேலை போனது குறித்து கண்டபடி திட்டி சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர் இதற்கு தாக்கு பிடிக்க முடியாமல்தான் பெரிய நிறுவனங்கள் இந்த மருத்துவக்காப்பீட்டை தொடர இசைவு தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட காலம் வரை வேலை செய்த பணியாளர்களுக்கு,நிறுவனமே பணியில் இருந்து நீக்கும்போது சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சில பெரிய நிறுவனங்கள், தங்களிடம் இருக்கும் திறமையான பணியாளரை நீக்கிவிட்டு அவர்களை வைத்துக் கொள்ள முடியாமல் தவித்தனர். இந்த சூழலில் நிலைமை சீரடைந்ததும் நிறுவனம் மீண்டும் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, ஏற்கனவே பணியில் இருந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறுவனங்களும் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.