ஐபிஓ சந்தைகளில் பெரிய சரிவு…

இந்திய பங்குச்சந்தைகளில் ஐபிஓ மார்கெட் கடந்த சில ஆண்டுகளாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடும் சரிவை இந்த பிரிவு கண்டுள்ளது. பிப்ரவரியில் வெளியிடப்பட்ட பெரும்பாலான ஐபிஓகள் இழப்பை சந்தித்து உள்ளன. ஐபிஓ மூலம் நிதி திரட்டிய 21 நிறுவனங்களில் 80%நிறுவனங்கள் எஸ்எம்இ வகையைச் சேர்ந்தவை. இந்த 21 நிறுவனங்களும் இணைந்து திரட்டிய தொகை 14 ஆயிரத்து 750 ரூபாய் மட்டுமே. இதில் ஹெக்ஸ் அவேர் நிறுவனம் மட்டும் 8 ஆயிரத்து 750 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 10%க்கும் குறைவான தொகையையே வசூலித்துள்ளன. ஜனவரியில் 26 ஐபிஓகள் 54 முதல் 950 மடங்கு அதிகம் விற்கப்பட்ட நிலையில் தற்போது நிலைமை மாறியுள்ளது. இதேபோல் 18 நிறுவனங்கள் எதிர்பார்த்த அளவுக்கு கூட பங்குகளை விற்க வில்லை. குறிப்பாக ரெடிமிகஸ் கட்டுமான நிறுவன பங்குகள் 52 விழுக்காடு வரை குறைவாக விற்கப்பட்டுள்ளன. ஐபிஓ எனப்படும் ஆரம்ப பங்கு வெளியீடு மட்டுமின்றி, சிறிய முதலீட்டு பிரிவும் பலத்த பாதிப்பை சந்தித்துள்ளன. இந்திய பங்குச்சந்தைகளில் சில்லறை வணிகத்தில் அதிகம் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக 2கே கிட்ஸ் அதிகம் ஈக்விட்டி, பரஸ்பர நிதி மற்றும் etfகளில் அதிகம் முதலீடு செய்கின்றனர்.