பெரிதாக வீழ்ந்த இந்திய சந்தைகள்….
வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் மேசமான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 930புள்ளிகள் சரிந்து 80 ஆயிரத்து220 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியிலும் சரிவு காணப்பட்டது. நிஃப்டி 309 புள்ளிகள் சரிந்து 24ஆயிரத்து 472 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், நெஸ்ட்லே இந்தியா நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன அதானி என்டர்பிரைசர்ஸ், கோல் இந்தியா,டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு பெரிதாக சரிவை கண்டன ஆட்டோமொபைல்துறை,உலோகம் ரியல் எஸ்டேட்துறை பங்குகள் இரண்டு முதல் 3 விழுக்காடு வரை சரிவை கண்டன ஓரியண்ட் சிமென்ட்ஸ், இண்டிகோ பெயின்ட்ஸ் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டன. அக்டோபர் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கம் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம்7ஆயிரத்து300 ரூபாயாகவும், ஒரு சவரன் 58 ஆயிரத்து400ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 110 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இங்கே நகை தொடர்பாக குறிப்பிட்டுள்ள விலைகளுடன் எல்லா கடைகளிலும் தங்கம்,வெள்ளிக்கு நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.