இந்தியாவை ஆய்வகம் என்று விமர்சித்த பில்கேட்ஸ்..
ரெய்ட் ஹாஃப்மேன் என்பவர் நடத்திய கலந்துரையாடலில் பங்கேற்ற பில்கேட்ஸ் இந்தியாவை ஆய்வம் என்று குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து ஆகியன இந்தியாவில் வளர்ந்து வருவதாகவும், இந்தியர்களே தங்கள் அரசுக்கு தேவையான அனைத்து நிதிகளையும் பெறும் அளவுக்கு சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் ஒரு விஷயத்தை நிரூபித்துவிட்டால் உலகின் எந்த மூலையிலும் அதை பயன்படுத்தலாம் என்றும் கேட்ஸ் கூறியுள்ளார். இந்த நேர்கானலை கேட்ட நபர் ஒருவர் இந்தியர்கள் என்ன கினி நாட்டு பன்றிகளா என்று ஆக்ரோஷமாக பேசியுள்ளார். மற்றொரு நபரோ பில்கேட்ஸ் கூறுவது போல இந்தியாவை பில்கேட்ஸ் ஆய்வகம் போல மாற்றியுள்ளதாகவும் விமர்சித்தார். இந்தியாவை விமர்சித்த அதே காணொலியில் , தங்கள் அமெரிக்க அலுவலகம் இல்லாமல் வெளியில் இந்தியாவில்தான் நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் பாராட்டியுள்ளார். பில்கேட்ஸ் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்துள்ள அதே நேரம், மற்றொரு தரப்பினர் பில்கேட்ஸை பாராட்டி வருகின்றனர். இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பில்கேட்ஸ் பாராட்டுகளை தெரிவித்தார்.