செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலம் இல்லை..
செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை வழங்கும் அலைக்கற்றையை நிர்வாக ரீதியில்தான் வழங்க முடியுமே தவிர்த்து ஏலமிட முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்தியாவில் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை கிடைக்க வைக்கும் துறை வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானிக்கு மட்டும் அலைக்கற்றை தரும் அரசு, தமக்கும் வழங்கலாமே என்று எலான் மஸ்க் தரப்பில் கோரப்பட்டிருந்தது. இந்தியாவில் அலைக்கற்றையை எப்படி யாருக்கு ஒதுக்கவேண்டும் என்று எந்த சட்டவிதிகளும் இல்லை என்று ஸ்டார்லிங் நிறுவனர் எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா செய்தியாளர்களிடம் பேசும்போது, அலைக்கற்றையை ஏலமெடுக்க விரும்புவது உலகில் நடப்பதற்கு மாறானது என்று விமர்சித்தார். முகேஷ் அம்பானிக்கு அளிக்கப்படுவது போலவே தங்களுக்கும் வாய்ப்புகள் தரப்படவேண்டும் என்றும், எலான் மஸ்க் கேட்டுக்கொள்வது போல ஏல முறைதான் சரியாக இருக்கும் என்று சுனில் மிட்டலும் கோரிக்கை விடுத்துள்ளார். ஏர்டெலுடன் இணைந்து யூடெல் ஸாட் அமைப்பின் ஒன்வெப், எலான் மஸ்கின் ஸ்டார்லிங், அமேசானின் குய்பெர் உள்ளிட்ட நிறுவனங்கள் அலைக்கற்றை என்பது இயற்கை வளம் என்றும் அதனை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்கள் சார்பில் கோரிக்கை வலுத்து வருகிறது.