பத்து% வரை விழுந்த பிட்காயின் மதிப்பு….
உலக அளவில் கிரிப்டோ கரன்சிகள் பெரிய முன்னேற்றத்தை சந்தித்திருந்த அதே நேரத்தில் இந்தியா பிட்காயின்கள் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளை தவிர்த்து வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு பிட்காயின் 73 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் தற்போது அது 65 ஆயிரம் டாலர்களாக சரிந்துள்ளது. மற்ற கிரிப்டோ கரன்சிகளான ஈத்தர் , பினான்ஸ் , சோலானா உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளும் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகின்றன. அமெரிக்க பணவீக்க தரவுகள் வெளியான நிலையில் அடுத்த சில நாட்களுக்கு இதே நிலை தொடர வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தொடர் இறங்கு முகத்தில் இருக்கும் கிரிப்டோ கரன்சிகளின்மதிப்பு அடுத்த சில நாட்களும் தொடரும் என்று கூறப்படுகிறது. லாபத்தை பதிவு செய்வதற்காகவே இதனை அந்த கரன்சி வைத்திருப்போர் செய்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஜனவரி இறுதியில் எந்த ஒரு பெரிய காரணமும் இல்லாமல், அந்த கரன்சிகள் மதிப்பு திடீரென இரட்டிப்பானது. அதாவது 38 ஆயிரம் டாலர்களில் இருந்து திடீரென 73 ஆயிரம் டாலர்கள் என்று அளவை கிரிப்டோ கரன்சிகள் எட்டின. நம்மூரில் பங்குச்சந்தைகள் ஒழுங்கு முறை அமைப்பான செபியை போல அமெரிக்காவில் உள்ள அமைப்பு பிட்காயின், ஈ டிஎப் முறையை கிளியர் செய்ததன் காரணமாகவே இந்த திடீர் விலை சரி காணப்படுகிறது . இதனால் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்ட்டோ கரன்சிகள் முதலீடு செய்தவர்கள் கலக்கமடைந்து உள்ளனர். வரும் நாட்களை இந்த நிலை சீராகும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.