3 ஆவதுநாளாக அமெரிக்க சந்தைகளில் சரிவு..

எது நடக்கவே கூடாது என்று அமெரிக்கர்கள் மட்டுமின்றி உலக மக்களே காத்திருந்தார்களோ அது சரியாக நடக்கிறது என்று கூறும் வகையில் அமெரிக்க அதிபர் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை. பரஸ்பர வரி விதிப்பு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய டொனால்ட் டிர்ம்ப், புதிதாக சீனாவை அச்சுறுத்தி வருகிறார். அதில் தற்போதுள்ள வரியை சீனா ஏற்காவிட்டால் வரியை மேலும் உயர்த்துவேன் என்று டிரம்ப் மிரட்டியுள்ளார்.
இதனால் அமெரிக்க பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையான டவ் ஜோன்ஸின் பங்குகள் 350 புள்ளிகள் வரை சரிவை கண்டன. 30 முக்கியமான பங்குகளின் மதிப்பு 1,700 புள்ளிகள் குறைந்து திங்கட்கிழமை அமெரிக்க பங்குச்சந்தையில் எஸ்அன்ட் பி 500 பங்குச்சந்தைகளில் 4.7விழுக்காடு சரிவு காணப்பட்டது. இதேபோல் அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச்சந்தையிலும் 0.10 விழுக்காடு சரிவு காணப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப், பரஸ்பர வரி விதிப்பு முறைக்கு 90 நாட்கள் ஓய்வு அளித்துள்ளதாக வெளியான தகவலால் அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஓரளவு ஏற்றம் காணப்பட்டது. பின்னர் வெள்ளை மாளிகையில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக வெளியான தகவல் பொய் என்றும் குறிப்பிடப்பட்டது. 50நாடுகள் பரஸ்பர வரி விதிப்பு குறித்து பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளதாகவும் வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்பட்டுள்ளது. சீனா மீது அதிக வரி விதித்துள்ள அமெரிக்க அதிபரால், ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 3.7விழுக்காடுவரை சரிவு காணப்பட்டது. கடந்த மூன்று வனிக நாட்களில் மட்டும் ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளின் சந்தை மதிப்பு 640 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பை சந்தித்துள்ளது.