ஆஸ்திரேலிய சந்தைகளில் ஏற்றம்..ஏன்?
ஆஸ்திரேலிய பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை நோக்கி திங்கட்கிழமை நகர்ந்தன. இதற்கு பிரதான காரணம் தங்கம் விலை சர்வதேச அளவில் உயர்ந்து வருவதுதான். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி கடன்கள் விகிதத்தை குறைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாக இருக்கும் சூழலில் ஆஸ்திரேலிய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. S&P/ASX 200 பங்குகள் அரைவிழுக்காடு மொத்தமாக உயர்ந்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி 8148 புள்ளிகள் உயர்ந்திருந்ததே இதுவரை உச்சபட்சமாக கருதப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி முதல் தங்கம் விலை ஆஸ்திரேலியாவில் உயர்ந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் நம்பிக்கை அளிக்கும் வகையில் உயர்ந்திருப்பதால், முதலீடுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய பங்குச்சந்தைகளில் நிதித்துறையில் முன்னோடியாக உள்ள ஆஸ்திரேலிய காமன்வெல்த் வங்கியின் பங்குகள் 0.8% உயர்ந்துள்ளது. இரும்பு தாதை வெட்டி எடுக்கும் நிறுவன பங்குகளும் லேசான அளவில் உயர்ந்துள்ளன. டெக் நிறுவனங்களின் பங்குகள் 1.2% வரை உயர்ந்துள்ளது. அமெரிக்க பங்குச்சந்தைகளிலும் குறிப்பிடத் தகுந்த விலை ஏற்றம் கண்டுள்ளன. நியூசிலாந்தின் பங்குச்சந்தையிலும் 0.4% விலை ஏற்றம் காணப்பட்டது.