இந்திய சந்தைகளில் ஏற்றம்
செப்டம்பர் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத் தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 361 புள்ளிகள் உயர்ந்து 81,921புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி105 புள்ளிகள் உயர்ந்து 25,041புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. தகவல் தொழில்நுட்பம், டெலிகாம், ஆற்றல், சுகாதாரத்துறை பங்குகளில் ஏற்பட்ட உயர்வு காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் கடன்கள் மீதான வட்டி விகிதங்களை குறைக்க திட்டமிட்டுள்ளதால் இந்திய சந்தைகளில் பெரிய முன்னேற்றம் காணப்பட்டன. 2473 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், 1300 நிறுவன பங்குகள் சரிந்தும் வர்த்தகம் நிறைவுற்றது. செப்டம்பர்10 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 680 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து440ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 91 ரூபாய் ஆக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோ 1000 ரூபாய் உயர்ந்து 91 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும்.