பங்குச்சந்தையில் ஏற்றமோ ஏற்றம்..
ஜனவரி 29 ஆம் தேதியான திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல உயர்வு காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1240 புள்ளிகள் உயர்ந்து 71 ஆயிரத்து 941 புள்ளிகளில்வ ர்த்தகமானது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 385 புள்ளிகள் உயர்ந்து 21,737 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. ஆசிய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதன் எதிரொலியாகவே இந்திய சந்தைகளிலும் சாதகம் நிலவியது. ONGC, Reliance Industries, Adani Enterprises, Coal India, Adani Ports ஆகிய நிறுவன பங்குகள் மிகப்பெரிய அளவில் லாபத்தை பதிவு செய்தன. Cipla, ITC, LTIMindtree, Bajaj Auto, Infosys ஆகிய நிறுவனங்கள் பெரிய சரிவை சந்தித்தன. எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் சுமார் 5 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. ஆற்றல்துறை 3 மற்றும் சந்தை முதலீட்டு குறியீட்டு பங்குகள் 2 விழுக்காடு ஏற்றம்கண்டன. SJVN, Cummins India, Godrej Properties, Indian Bank, Indian Hotels, Infibeam Avenue, IRB Infrastucture, LIC Housing Finance, NBCC (India), NCC, NHPC, ONGC, PNC Infratech, Power Finance, Rain Industries, REC, Shakti Pumps, Shriram Finance, Steel Exchange, Tata Investment Corporation ஆகிய நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை எட்டின. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் விலை உயர்ந்து 46 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது முன்தின விலையை விட ஒருகிராம் 5 ரூபாய் அதிகமாகும். இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் விலை உயர்ந்து 77ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோ ₹200 உயர்ந்து 77 ஆயிரத்து 700 ருபாய். என்ற அளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ஒரு கிராம் விலை 5845 ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி,சேதாரம் ஆகியவை சேர்க்கப்பட வேண்டும்,இதில் செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.