BPOகளில் வேலைக்கு ஆட்கள் எடுப்பது சரிவு..

ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் களமிறங்கியுள்ளதால் பிபிஓகளில் வேலைக்கு ஆட்களை எடுக்கும் விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள், வன்பொருள் மற்றும் அது சார்ந்த துரையில் மட்டும் 54லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டதால் வருங்காலம் எப்படி இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம் செயற்கை நுண்ணறிவு வந்ததால் மனிதர்கள் முற்றிலுமாக வேலையை விட்டு நிறுத்திவிடப்போவதில்லை என்று இந்துஜா நிறுவனம் கூறியுள்ளது. பெரிய நிறுவனங்களில் 20பேருக்கு ஒரு டீம் லீடர் இருந்த நிலையில் தற்போது அவை 30 ஆக உயர்ந்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 35 முதல் 40 விழுக்காடு வரை பணியாளர்கள் குறைவார்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரம் WNS என்ற நிறுவனம் தனது நிறுவனத்துக்கு அதிக பணியாளர்களை எடுக்கப்போவதாகவும் கூறியுள்ளது. தொடர்ச்சியாக ஒரே மாதிரியான கேள்விகள் எழும்போது அதற்கு பதில் அளிக்க இனி மனிதர்கள் தேவையில்லை என்று கூறும் சில நிபுணர்கள், அந்த பணிகளை இனி செயற்கை நுண்ணறிவு செய்துவிடும் என்பதால் அந்த பணிகளை ஏஐ காலி செய்துவிட்டது என்பதே இதன் அர்த்தமாகும்.