செபியின் அட்டகாச அறிவிப்பு..

பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பு செபி. இந்த அமைப்பு டிபிளஸ் 0 என்ற முறையில் வணிகம் செய்த பணத்தை அன்றே எடுத்துக்கொள்ளும் விருப்ப வசதியை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. சந்தை மூலதன அளவில் பட்டியலில் உள்ள முதல் 500 நிறுவனங்கள் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் , வரும் 31 ஆம் தேதி வரை இந்த சலுகை நீட்டக்கப்படுகிறது. குறைந்தபட்சமாக உள்ள முதல் 100 நிறுவனங்களுக்கும் பின்னர் படிப்படியாக அடுத்தடுத்த நூறு நிறுவனங்களுக்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. டிபிள்ஸ் 0 முறையில் அனைத்து பங்கு தரரக்களும் பங்கேற்பார்கள் என்றும் அன்றைய தினமே பணம் கைக்கு வர ஒரு கட்டணமும், டிபிளஸ் 1 என்ற விதிக்கு மாறுபட்ட கட்டணத்தையும் தரகு நிறுவனங்கள் வாங்க உள்ளன. டி பிளஸ் 0 திட்டம் கடந்த மார்ச் 28 ஆம் தேதியே அறிமுகப்படுத்தப்பட்டாலும் தகுதி வாய்ந்த தரகர்களுக்கும் அது நீட்டிக்கப்பட்டது. பிளாக் டீல்களுக்கு தினசரி காலை8.45 முதல் 9.00 மணி வரை இயங்கி வருகின்றன. ஜனவரி 31 வரை டிபிளஸ் 0 சைக்கிளை நீட்டிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தைகள், டெபாசிட்டர்கள் என அனைத்து நிலைகளும் தயாராக இருப்பதாகவும், விரைவான செட்டில்மன்ட் சாத்தியம் என்றும் செபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.