ஹோட்டல் ஜிஎஸ்டி விவகாரம் பற்றி ஆராய்கிறோம்-நிதியமைச்சர்..
ஜிஎஸ்டியில் ஹோட்டல் துறையில் உள்ள குறைபாடுகள் குறித்து அமைச்சர்கள் குழு ஆய்வு மேற்கொண்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இனிப்புக்கு 5 விழுக்காடு, காரத்துக்கு 12 விழுக்காடு ஜிஎஸ்டியா என்று ,ஸ்ரீனிவாசன் என்பவர் நிதியமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் கடந்த ஆண்டு இது தொடர்பாக அமைச்சர்கள் குழு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க முடிவெடுத்திருப்பதாக கூறினார். கடந்த 7 ஆண்டுகளில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அநைத்து மாநில அமைச்சர்கள் கலந்து பேசி ஒரு முடிவு எடுக்கப்படுவதாகவும், அனைத்து தரப்பினரின் ஆலோசனைக்கு பிறகுதான் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலில் இருப்பதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வட இந்தியர்கள் அதிகம் சாப்பிடும் இனிப்புகளுக்கு குறைவான ஜிஎஸ்டியும், தென்னிந்தியர்கள் அதிகம் சாப்பிடும் கார வகைகளுக்கு அதிக ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ளது தேசிய அளவில் கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் கலந்து முடிவு என்ற நிதியமைச்சரின் விளக்கம் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.