இது மேடத்தின் கணக்கு…
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சிலமாதங்களே இருக்கும் நிலையில் பட்ஜெட்டில் இடம்பிடித்துள்ள அம்சங்கள் குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. வரும் 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். வரும் தேர்தலை கருத்தில் கொண்டு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அளிக்க நிதியமைச்சர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏழை மக்களுக்கு பயன்தரும் வகையிலான திட்டங்களை வகுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. 2019ஆம் ஆண்டு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளைப்போலவே ஏழை மக்களை குறிவைத்து அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. கிராமபுற மக்களே விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்ப்டுள்ளனர். அவர்களுக்கு பலன்தரும் வகையில் இருக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். 2 ஏக்கர் நிலம் வைத்திருப்போர் குறிப்பாக 6,000ரூபாய் பணம் தரும் திட்டம் போல வேறு ஏதேனும் திட்டம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோருக்கென பிரத்யேக திட்டங்கள் இருக்கலாம் என்றும் 5லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்துக்கு ரீபேட் கிடைக்கும் வகையில் அறிவிப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் இடைக்கால பட்ஜெட்டில் மகளிருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. அண்மையில் நடந்த மத்திய பிரதேச தேர்தலில் ஆண்களைவிட பெண்கள் அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். மகளிர் சார்ந்த திட்டங்கள் வரும் இடைக்கால பட்ஜெட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.