உயர்ந்து முடிந்த சந்தைகள்
ஆகஸ்ட் 21 ஆம் தேதி புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் குறிப்பிடத்தகுந்த ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 102 புள்ளிகள் உயர்ந்து 80ஆயிரத்து 905 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி71 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து770 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. Divi’s Labs, Titan Company, SBI Life Insurance, Cipla,Grasim Industries உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன. Tech Mahindra, UltraTech Cement, Tata Steel, Power Grid Corp, HDFC Bank உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை கண்டன. ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 1.3விழுக்காடு சரிந்தன. வங்கிக் குறியீட்டு பங்குகள் 0.2விழுக்காடு குறைந்தன. FMCG, மருந்து, உலோகம், டெலிகாம் மற்றும் ஊடகத்துறை பங்குகள் அரை முதல் 1 விழுக்காடு வரை விலை உயர்ந்து முடிந்தன. GlaxoSmithKline Pharmaceuticals, Jubilant FoodWorks, Nippon Life India Asset Management, HPCL, Gillette India, Glenmark Pharma, Muthoot Finance, Voltas, Coromandel International, Colgate Palmolive, Sun Pharma உள்ளிட்ட 300க்கும் அதிகமான நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்ச விலையை தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையில் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்தது. புதன் கிழமை ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் விலை உயர்ந்து 6 ஆயிரத்து 710 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 680 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு 92 ரூபாயாக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோ 92ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும்.