பிஒய்டி நிறுவனம் மறுப்பு..

இந்தியாவில் தனது ஆலையை தொடங்க பிஒய்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அந்நிறுவனம் மறுத்துள்ளது. கடந்த வாரம் இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனங்கள் பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் குறிப்பாக ஐதராபாத்தில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை செய்ய இருப்பதாக செய்தி வெளியிட்டன. இந்த நிலையில் தாங்கள் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று பிஒய்டி நிறுவனம் மறுத்துள்ளது. தென்கிழக்கு ஆசியா, தென் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளிலும் தனது வியாபாரத்தை பிஒய்டி நிறுவனம் விரிவாக்கம் செய்து வருகிறது. சீனாவை பூர்விகமாக கொண்டதாக பிஒய்டி நிறுவனம் திகழ்ந்தாலும், இந்தியாவில் அது உப நிறுவனமாகவே திகழ்கிறது. இந்தியாவில் இந்த நிறுவனம், மின்சார பஸ் மற்றும் பயணிகள் வாகனத்தைத்தான் குறிவைத்து பணிகளை செய்து வருகிறது. தெலங்கானா அரசு பிஒய்டி நிறுவனத்துக்கு 3 இடங்களை தேர்வு செய்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பிஒய்டி நிறுவனம், இயங்கி வருகிறது. எனினும் இதுவரை உற்பத்தி ஆலையை அந்நிறுவனம் தொடங்கவில்லை. சீனாவில் இருந்து அதிகளவில் பொருட்களை இறக்குமதி செய்து அதற்கு பெரிய தொகையை வரியாகவும் செலுத்தி வருகிறது. இந்தியாவிலேயே கார் உற்பத்தியை தொடங்கினால் பணம் ஏராளமான அளவில் மிச்சமாகும் என்பதே திட்டமாக இருக்கிறது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2023 ஆம் ஆண்டு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய பிஒய்டி நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில் இந்திய அரசு அவர்களின் முதலீட்டை புறக்கணித்தது.