பணம் கேட்டு சைபர் தாக்குதல்..
இந்தியாவில் பல வங்கிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை செய்து வரும் சி-எட்ஜ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த நிறுவனம் வழங்கி வந்த டிஜிட்டல் பேமண்ட் சேவைகள் அதாவது 300 வங்கிகளின் சேவைகள் பாதிக்கப்பட்டன. தாக்குதல் எல்லை மீறி சென்ற நிலையில் உள்ளே புகுந்த தேசிய பணப்பரிவர்த்தனை கழகம், பேமண்ட் வசதிகளை சிஎட்ஜ் நிறுவனம் செய்வதில் இருந்து விலக்கி வைத்துள்ளது.
இதனால் அந்த நிறுவனம் தொடர்புடைய ஆர்டிஜிஎஸ் மற்றும் யுபிஐ பேமண்ட் வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பலரின் கணக்குகளில் இருந்து பணம் சென்றுள்ளது ஆனால் மறுமுனையில் இருப்பவரின் கணக்குக்கு இதுவரை சென்று சேரவில்லையாம். தாக்குதலுக்கு ஆளான 300 வங்கிகளும், இந்திய பணப்பரிவர்த்தனைகளில் 0.5 விழுக்காடு மட்டுமே உள்ளதாகும். இதனால் பெரிய பாதிப்பு இல்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய பணப்பரிவர்த்தனை கார்பரேஷன் ஒரு ஆய்வு மற்றும் தணிக்கை செய்ய உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய சைபர் பதகாப்பு அதிகாரிகள் பணிகளில் இறங்கியுள்ளனர். ரேன்சம் வேர் என்பது உங்கள் தரவுகளை திருடிவிட்டு, அதை திரும்ப தர உங்களிடமே திருடன் விலை வேசுவது. மோசடியான வெப்சைட்டுகளில் இருந்து இந்த வகை மென்பொருள்கள் மக்கள் கணினிகளில் புகுந்து சேட்டை செய்வது அதிகரித்துள்ளதால் மக்கள் பாதுகாப்பாத இருப்பது நலம்.