குளிர்பான சந்தையை ஆட்டிப்படைத்து வரும் ரிலையன்ஸ்..

வெயில் தொடங்கியாச்சு மக்கள் குளிர்பானங்களை அதிகளவில் வாங்கிக் குடிப்பார்கள் என்பதால் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் தற்போதை சலுகைகளை அள்ளி வீசத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே கேம்பா கோலா நிறுவனத்தை வாங்கிய ரிலையன்ஸ் நிறுவனம், அதன் 10 ரூபாய் குளிர்பானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏற்கனவே சந்தையில் உள்ள பெரிய நிறுவனங்களையும் அசைத்துப்பார்த்துள்ளது. கொக்க கோலா, பெப்சி, டாபர், ஐடிசி நிறுவனங்களும் தங்கள் விலைகளை குறைக்கத் தொடங்கியுள்ளன. டாபர் நிறுவனத்தின் நெக்டார் வகை டூஸ் விலை லிட்டர் 130-க்கு பதிலாக 100 ரூபாயாக விற்கப்படுகிறது. பெப்சி மற்றும் கொக்க கோலா வெறும் 50ரூபாய்க்கு கிடைக்கிறது. கொக்க கோலா நிறுவனம் கொல்கத்தாவில் சில சலுகைகளையும் அறிவித்துள்ளது. அதன்படி 250 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட பாட்டில்கள் 20 ரூபாய்க்கு பதில் 15 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. ஐடிசி நிறுவனம் விற்பனை செய்து வரும் பி நேச்சுரல் வகை குளிர்பானங்களும் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளது. 2024-25 காலகட்டத்தில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கேம்பா கோலா நிறுவனம் 1000 கோடி ரூபாய் வசூலிக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது. மார்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டுமே குளிர்பான நிறுவனங்கள் தங்கள் வருவாயில் 60 முதல் 65 விழுக்காடு விற்பனை செய்கின்றன.இளநீர், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர், இயற்கை பழரசங்கள் விலை அதிகம் என்பதால் மக்கள் குறைந்த விலை குளிர்பானங்களை அதிகம் விரும்புவதாகவும் இந்த துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.