இது மின்சார கார்களின் யுத்தம்..
அமெரிக்காவின் டெஸ்லா நிறுவன கார்கள் தான் இதுவரை அழகான, அமைதியான மின்சார கார் என்ற பெறுமையை பெற்றுள்ளன. இந்த நிலையில் பிஒய்டி, டெஸ்லா நிறுவனங்களுக்கு மஹிந்திரா நிறுவனம் ஒரு சவலாக மாறியுள்ளது. பி இ 6இ, எக்ஸ் யூவி 9இ ஆகிய இரண்டு கார்கள் அண்மையில் மஹிந்திரா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக ராஜேஷ் ஜெஜூரீக்கர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் உலகில் எந்த நிறுவனத்தை கண்டும் தங்களுக்கு பயம் இல்லை என்றும், டெஸ்லா, பிஒய்டி என எந்த நிறுவனம் வந்தாலும் இந்த வகை கார்களை தரமுடியாது குறிப்பாக இந்த குறைந்த விலைக்கு தரமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 12,000 கோடி ரூபாயை மின்சார கார்கள் தயாரிக்க மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் நிதி ஒதுக்கியுள்ளது. மஹிந்திராவின் புதிய கார்கள் உருவாக 3 ஆண்டுகள் ஆனதாகவும், உற்பத்தியை அதிவேகததில் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறயிருக்கிறார். விலை என்ற ஒற்றை அம்சத்தை தவிர்த்து மற்ற அனைத்திலும் தங்கள் நிறுவனம் ஆக்ரோஷமாக இருக்கும் என்றும் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டு மின்சார கார்களின் சந்தை மதிப்பு 30 விழுக்காடு வரை உயரும் என்று கூறியுள்ள அவர், இந்தியாவில் நல்ல தரமான பொருளை,மக்கள் விரும்பினால் அது அசுர வேகத்தில் விற்பனையாகும் என்றார். இதுபோன்றதொரு தயாரிப்பை இந்தியா இதற்கு முன்பு பார்த்தது இல்லை என்றும் கூறியுள்ளார்.