22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

டெலிவரியின்போது பணம்–தீர்வுகண்டது சொமேட்டோ..

பசி எடுத்தா நீ நீயா இருக்க மாட்ட என்ற ஒரு விளம்பரம் வரும் அதேபாணியில் 3 வேளையும் ஆர்டர் செய்து சாப்பாடு சாப்பிடும் பலர் இந்தியாவில் உள்ளனர். அதிலும் சிலர் பொருள் கையில் சேர்ந்த பிறகுதான் பணத்தையே எடுத்து வைப்பார்கள். அப்படி இருப்பவர்களுக்கு சில்லறை தேடியே மல்லு கட்டவில்லை என்பவர்களுக்கு சொம்மேட்டோ புதிய வசதி அறிமுகப்படுத்தியுள்ளது. சில்லறை இல்லை என்று டெலிவரி நபர் கூறுகையில் பணம் இல்லை என்றுப கூற பலருக்கு தர்ம சங்கடம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக, ஆர்டர் செய்யும் பொருளுக்கு கூடுதல் தொகை கொடுத்தால் அந்த தொகை அப்படியே வாலட்டில் சேர்ந்துவிடும் என்றும் மீர்ந்தால் அது அடுத்த முறை பயன்படுத்தலாம் என்றும் சொமேட்டோ அறிவித்துள்ளது. இந்த ஐடியாவை தந்த பிக பாஸ்கெட் நிறுவனத்துக்கு நன்றி என்றும் சொமேட்டோ நிறுவன தலைமை செயல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். எளிமையாக இருந்தாலும் நல்ல அம்சம் என்று வாசகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
வாடிக்கையாளர் நலனில் பல நிறுவனங்களும் அக்கறை காட்டுவதையும் அவர்கள் பாராட்டத் தலறுவதே இல்லை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *