விண்ட்ஃபால் வருவாய்க்கான வரியை உயர்த்தியது மத்திய அரசு…
விண்ட்ஃபால் டாக்ஸ் எனப்படும் வரியை மத்திய அரசு டீசலுக்கு லிட்டருக்கு 12 ரூபாயும், விமான எரிபொருளுக்கு லிட்டருக்கு 3.50 ரூபாயும் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு சந்தைகளில் நிலவும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி மீதான வரியை கூட மத்திய அரசு கிட்டத்தட்ட மும்மடங்கு உயர்த்தியுள்ளது. அதாவது ஒரு டன் கச்சா எண்ணெய் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தால் இதுவரை ஒரு டன்னுக்கு 3 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த வரி, தற்போது முதல் 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.
இந்த புதியவிலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வெளிநாட்டு கச்சா எண்ணெய் விலை சரிந்திருந்தபோது உள்நாட்டு கச்சா எண்ணெயின் வரியை மத்திய அரசு குறைத்திருந்தது. தற்போது வெளிநாடுகளிலும் விலையேறிய நிலையில் இந்தியாவிலும் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது
ரிலையன்ஸ் மற்றம் நயரா நிறுவனங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட உள்ளன
கடந்த ஜூலை 1ம் தேதி முதல் வின்ட்ஃபால் டாக்ஸ் எனப்படும் வரிமுறை விதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறை இந்த வரியை மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்க உள்ளது.