ஆகஸ்டில் அட்டகாசமான வசூல்:
நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் ஜி எஸ் டியாக வசூல் ஆகியுள்ளது. இது கடந்தாண்டை விட 28% அதிகமாகும். தொடர்ந்து 6வது மாதமாக ஜி எஸ்டி வரி 1 லட்சத்து 40 ஆயிரம் கோடிக்கு அதிகமாக உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.
பஞ்சாப், ஹரியானா, டெல்லி,உள்ளிட்ட மாநிலங்கள் இரட்டை இலக்க வரி வசூலை செய்துள்ளன . மாநிலத்துக்கு உள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் மொத்தம் 7 கோடியே 60 லட்சம் e- பில் பதிவாகியுள்ளன. மொத்தம் வசூலான ஜிஎஸ்டியில் 54 ஆயிரம் கோடி மத்திய ஜிஎஸ்டியும், 56 ஆயிரம் கோடி ரூபாய் மாநில ஜிஎஸ்டி ஆகவும் உள்ளது. இந்த உயர்வு இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பையும் மத்திய அரசு முன் வைத்துள்ளது.