ஓலா எலெக்ட்ரிக் சந்திக்கும் சவால்கள்..
மின்சார பைக் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஓலா நிறுவனம் உள்ளது. இந்தநிறுவனத்தின் பைக்குகளில் சமீப காலமாக சேவை குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டு முடிவுகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அந்த நிறுவனத்துக்கு 5 முக்கிய சவால்கள் உள்ளதாக அதன் தலைவர் பவிஷ் அகர்வால் குறிப்பிட்டார். பணத்தை உருவாக்குவது, சேவை குறைபாடுகளை சரி செய்வது, வாரண்டி தொகை, பிளாட்ஃபார் மற்றும் போட்டியை எதிர்கொள்வது ஆகிய சவால்கள்தான் இருப்பதாக அவர் கூறியுள்ளார். வரும் மார்ச் மாதத்துடன் 2 ஆயிரம் சேவை மையங்களை அமைக்கவும் பணிகள் நடப்பதாக அவர் குறிப்பிட்டார். அண்மையில் நகைச்சுவை கலைஞர் ஒருவருடன் பவிஷ் இணையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, சேவை குறைபாடு உள்ளிட்ட புகார்களை ஓலா நிறுவனம் சந்தித்து வருகிறது. விநியோக கிளைகளை அதிகரிப்பதும், அதிநவீன கருவிகளை சேவைகளுக்காக பயன்படுத்தவும் பவிஷ் திட்டமிட்டுள்ளார். இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி மின்சார 3 சக்கர வாகனங்களையும் அந்நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. ரோட்ஸ்டர் என்ற மின்சார பைக்கையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. வாடிக்கையாளர் குறைகளை கேட்காமல் கிளைகளை விரிவுபடுத்திக்கொண்டே செல்வது தோல்வியில் முடியும் என்றும் சிலர் பவிஷை எச்சரித்து வருகின்றனர்.