ஆயுள் காப்பீட்டு விதி மாற்றம்..
அக்டோபர் 1 ஆம் தேதியான இன்று முதல் ஆயுள் காப்பீட்டில் புதிய விதி கடைபிடிக்கப்படுகிறது. அதாவது பாலிசியை எடுத்து சில காலமே ஆன பாலிசியில் இருந்து வெளியேறினால் ஸ்பெஷல் சரண்டர் வேல்யூ எனப்படும் கூடுதல் தொகை கிடைக்கும்.
காப்பீட்டு நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்பான IRDAI வெளியிட்டுள்ள தகவலின்படி, பாலிசிகளை மாற்றிக்கொண்டே இருப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாத சுற்றறிக்கையின்படி,ஸ்பெஷல் சரண்டர் மதிப்பு என்பது இதுவரை கட்டியுள்ள தொகையும், வருங்கால பலன்கள், மற்றும் சர்வைவல் பலன்கள் கிடைக்கும். உதாரணமாக 2 லட்சம் ரூபாய்க்கான பாலிசியில் 4 அல்லது 7 ஆவது ஆண்டுக்குள் பாலிசியை சரண்டர் செய்தால், பழைய விதிப்படி 1.2 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்திருக்கும். ஆனால் புதிய விதிப்படி 1.55லட்சம் ரூபாய் கிடைக்கும். 5லட்சம் ரூபாய் பாலிசி 10 ஆண்டுகள் கட்டும் திட்டத்தில், 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஓராண்டு நிறைவடையும்பட்சத்தில் , பழைய விதிப்படி ஓராண்டில் கொஞ்சம் கூட பணம் திரும்ப கிடைக்காது. ஆனால் புதிய விதிப்படி 31,295 ரூபாய் கிடைக்கும். அவசரப்பட்டு பாலிசியை எடுத்துவிட்டோம் என்று வருத்தப்படும் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய விதி பெரிதும் உதவும் என்று கூறப்படுகிறது.