வங்கியல்லா நிதிநிறுவனங்கள் மாற்றம்..
இந்தியாவின் வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி தரப்பில் அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளன. அதில் கடன் அளிக்கும் நபர்களுக்கான விவரத்தையும், சந்தை சார்ந்த கடன்களாகவும் இருக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கியல்லாத பிற நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கும் இடையே இணைப்பே இல்லாமல் போயுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்த இரு அமைப்புகளுக்கும் இடையேயான பிரிவு வரும் 3 ஆம் காலாண்டில் குறையும் என்றும் கூறப்படுகிறது. வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு வங்கிகள் அளிக்கும் கடனின் அளவு கடந்தாண்டு 18.3%ஆக இருந்த நிலையில், கடந்த அக்டோபரில் இந்த விகிதம் 6.4%ஆக இருந்தது. இந்திய ரிசர்வ் வங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து எச்சரித்து வந்தததால் நிலைமை சற்று மாறியுள்ளது. வங்கிகளில் இருந்து கடன் பெறாமல் நிதி நிறுவனங்கள் இயங்குவதால்தான் ரிஸ்குகள் அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற கடனின் விகிதம் உயர்ந்து வரும் நிலையில், கடந்தாண்டு நவம்பரில் ரிசர்வ் வங்கி ரிஸ்க் வெயிட் மற்றும் சில வங்கிகளின் கடன் குறித்த விவரங்களை 25%ஆக உயர்த்தியது. சந்தைக்கு அதிககடனாக 2.1 டிரில்லியன் அளவுக்கு வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத பிற நிறுவனங்கள் செயல்படும் என்றும் தற்போதைய நிதியாண்டில் இது வெறும் 1.9 டிரில்லியனாகவே தொடர்கிறது. மொத்த கடனில் 61 விழுக்காடு NBFC நிறுவனங்கள் வழங்கிய கடன்கள் 61 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதே நேரம் கடன் பத்திரங்கள் மூலம் நிதி நிறுவனங்கள் 6.3 டிரில்லியன் ரூபாய் மதிப்புள்ள பணம் வழங்கியது. அக்டோபர் 2024 வரை NBFC நிறுவனங்கள் கடன் வாங்கும் திறன் என்பது 15.4டிரில்லியன் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பரை ஒப்பிடும்போது, வங்கிக் கடன்கள் அதிகம் வாங்கப்படும் நிலையில் NBFC நிறுவனங்கள் பின்தங்கி உள்ளன.