பணம் தருவதை குறைக்கும் சீனா..

பங்குச்சந்தைகளில் நிதிகளை மேலாண்மை செய்யும் ஃபண்ட் மேனேஜர்களுக்கு தனியாக சம்பளமாக பணம் தரவேண்டியுள்ளது, இந்த நிலையில் அவர்களுக்கான பணத்தை குறைப்பது குறித்து சீனா திட்டமிட்டுள்ளது. பரஸ்பர நிதியில் 4.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதியை அந்த நிறுவனம் குறைக்க ஆலோசித்து வருகிறது. 10 விழுக்காடுக்கும் குறைவான ரிட்டன்ஸ் வரும் வகையில் உள்ள நிதி மேலாளர்களுக்கு கொடுக்கும் பணத்தில் 50% குறைக்க வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. நீண்டகால ஆலோசனை மற்றும் ஆய்வின் ஒரு பகுதியாகவே இந்த பணம் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சீன பங்குச்சந்தைகளில் நீண்டகால முதலீடுகளை ஊக்குவிக்க பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாகவே நிதி மேலாளர்களுக்கு பணம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீன பரஸ்பர நிதித்துறையில் வளர்ச்சி காணப்பட்டாலும், சில பங்குகள் சொதப்புவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவுகள் எடுக்கப்படும் என்றும் சீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பரஸ்பர நிதி மட்டுமின்றி, ஈக்விட்டி துறை பங்குகளிலும் அந்த நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. நீண்டகால முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புத் தொகுப்பையும் கடந்த ஜனவரியில் சீனா வெளியிட்டிருந்தது.மேலும், மத்திய அரசுக்கு சொந்தமான காப்பீட்டு நிறுவனங்கள், மெயின்லாந்தில் உள்ள பங்குச்சந்தைகளில் 30 விழுக்காடு புதிய பிரீமியத்துக்கு முதலீடு செய்யலாம் என்றும் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.