டெஸ்லாவுக்கு போட்டியாக குதிக்கும் சீன நிறுவனம்.
உலகளவில் மின்சார கார்களில் சிறந்தவையாக டெஸ்லா நிறுவன கார்கள் திகழ்கின்றன. இந்நிலையில் டெஸ்லா நிறுவன கார்களுக்கு போட்டியாக சீனாவில் பல மின்சார கார் நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. டெஸ்லாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் புதுப்புது வசதிகளை சீன நிறுவனங்கள் தங்கள் கார்களில் அறிமுகப்படுத்தியுள்ளன. குறிப்பாக சில கார்களில் புரொஜெக்டர்கள், ஃபிரிட்ஜ்கள், உள்ளிட்டவையும் இடம்பிடித்துள்ளன. டெஸ்லா நிறுவன கார்களில் தற்போது வரை டிரைவருக்கு உதவும் அம்சங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் சீனர்கள் அசத்தலான அம்சங்களை தங்கள் மின்சார கார்களில் எதிர்பார்க்கின்றனர். செல்போன் சந்தைகளைப் போலவே சீனாவில் மின்சார கார்கள் சந்தை அசுர வேகமான சந்தையாக இருக்கின்றன. சீனாவைப்போலவே ஐரோப்பியர்களும் கார்களில் பல வகை கூடுதல் வசதிகளைத்தான் விரும்புகிறார்கள். அப்போட்ரானிக்ஸ் நிறுவனம் தனது 32 அங்குல புரொஜக்ஷன் ஸ்கிரீன்களை கார்களில் வைத்துள்ளன. குறிப்பாக ஹூவாவே நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய M9என்ற எஶ்யூவி ரகத்தில் உருவான ஐட்டோ என்ற கார்களில் புதிய அம்சங்கள் இடம்பிடித்துள்ளன. ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி M9 ரகத்தில் தயாரான ஐட்டோ ரக கார்களை 30 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்திருக்கின்றனர். இவை அடுத்த மாதம் டெலிவரி செய்யப்பட உள்ளன. டெஸ்லா, லி ஆட்டோ எக்ஸ்பெங் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளில் பல்வேறு அம்சங்கள் இடம்பிடித்துள்ளன.
சீனாவில் இந்தாண்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட மின்சார கார்கள் சந்தையில் அறிமுகமாக உள்ளன. கட்டுப்படியாகும் விலை மற்றும் அதிக மைலேஜ் ஆகிய இரண்டு மட்டுமே வாடிக்கையாளர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளன. இவை தவிர்த்து மற்ற அம்சங்களும் வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அமெரிக்க கார்கள் விலையை குறைவாக தர முயற்சிக்கும் அதே நேரத்தில் சீன கார்கள் ஆடம்பரமான வசதிகளை அளிக்க திட்டமிட்டு வருகின்றனர். சீனர்களின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது. என்னதான் அமெரிக்கா,ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மின்சார கார்கள் தயாரித்தாலும் சீனாவில் தான் தரமான மின்சார பேட்டரிகள் கிடைக்கின்றன. இதனால் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தைவிட சீனாவின் BYDநிறுவன கார்களுக்கு அதிக மவுசு இருந்து வருகிறது. அமெரிக்காவைப் போலவே சீனாவிலும் தானியங்கி மின்சார கார்கள் அதிக கவனம் பெற்றுள்ளன. டெஸ்லாவில் ஆட்டோ பைலட் என்ற அம்சம் நெடுஞ்சாலைகளில் மட்டுமே உள்ளன, அதேநேரம் சீன நுட்பங்களான சிக்னலில் மெதுவான பிரேக்கிங் வசதி உள்ளிட்ட அம்சங்கள் சீன வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.