வங்கிகளுக்கும் சிப் தான் பிரச்சனை….
ஏடிஎம் கார்டுகள், கிரிடிட் கார்டுகளில் செமி கண்டெக்டர் சிப் எனப்படும் அரைக்கடத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செமி கண்டெக்டர் சிப்கள் முறையாக கிடைக்காத்தால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிப் உள்ள கார்டுகள் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. அதில் சிசிஐ எனப்படும் இந்திய போட்டிகள் ஆணையத்திடம் இந்திய வங்கிகள் முறையிட்டுள்ளன. சீன உற்பத்தியாளர்களை தவிர்த்துவிட்டு உள்ளூர் சிப் உற்பத்தியாளர்களை அணுகினால் அவர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு கேட்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.சிப் பற்றாக்குறையால் பிரதம மந்திரியின் ஜன்தன் கணக்குகள் உள்ளோருக்கும் புதிய கார்டு தர முடியாத சூழல் நிலவுவதாக தெரிகிறது. அதில் உலகளாவிய பொருளாதார நிலையற்ற சூழல் இருப்பது உண்மைதான் என்று கூறும் அதிகாரிகள் அடுத்த சில வாரங்க்களுக்கு இதே நிலை தொடரும் என்று கூறியுள்ளார். கடந்த மாதம் 24ம் தேதி வரை இந்தியாவில் 31 கோடி ரூபே வகை கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.