பிரிட்டானியாவில் வருகிறது சாக்லேட்..
இந்தியாவின் முன்னணி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா,அடுத்தகட்டமாக சாக்லேட் சந்தையில் காலடி எடுத்து வைக்க உள்ளது. இதற்காக கூட்டு நிறுவனம் ஒன்றும் தயாராகிறது.இந்த கூட்டு நிறுவனத்தில் சாக்லேட், பால் பொருட்கள் மற்றும் உப்பால் ஆன நொறுக்குத் திண்பண்டங்கள் தயாராக இருக்கிறது. இதனை பிரிட்டானியாவின் துணைத் தலைவர் மற்றும் நி்ரவாக இயக்குநரான வருண் பெர்ரி அதிகாரபூர்வமாகவே தெரிவித்துள்ளார். பெயின் அண்ட் கோ நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய சந்தையை உருவாக்குகிறது. நுஸ்லி வாடியா தலைமையிலான இந்த நிறுவனம் சந்தையில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதுடன், விற்பனை பிரிவில் புதிய ஆட்களை தேர்வு செய்யவும் திட்டமிட்டுள்ளது. சாக்லெட் சந்தை என்பது பெரியதாக இருந்தாலும் ஆதிக்கம் செலுத்துவது பிரிட்டானியாகவுக்கு கடினமாக இருக்கிறது. பிஸ்கட் மற்றும் கேக்குகள்,ரஸ்க், எனர்ஜி பார்ஸ், மில்க்க்ஷேக் ஆகிய சந்தையும் அப்படியே தொடரும் என்று கூறப்படுகிறது. சீஸ் தொடர்பான சந்தை 100 கோடி ரூபாயாக உள்ளதாகவும் பிரிட்டானியா நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பிரிட்டானியாவில் அதிகம் விற்கப்படும் மாரி கோல்ட்,நூட்ரிசாய்ஸ், குட் டேஉள்ளிட்டவையுடன் பிரெஞ்சு நிறுவனமான பெல் குழுமத்துடன் ஏற்கனவே ஒரு கூட்டு நிறுவனம் அமலில் உள்ளது. உள்ளீட்டு பிரிவு பணம் நிலையாக உள்ளது. பிரிட்டானியா நிறுவனத்தின் 9 மாத கணக்குப்படி 12,532 கோடி ரூபாயாக வருவாய் உயர்ந்திருக்கிறது. ஆனால் மொத்த லாபத்தில் 9 விழுக்காடு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. போட்டியை சமாளிக்க பிர்ட்டானியா புதுப்புது பொருட்களை சந்தை படுத்த உள்ளது. சீஸ பொருட்களிலும் அந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் சற்றே ஏற்ற இறக்கத்தை பிரிட்டானியா சந்தித்து வந்தாலும் சர்வதேச அளவில் 2 இலக்க வருவாயை பெற்று வருகிறது. அதே நேரம் கிராமபுறங்களில் சந்தையை விரிவுபடுத்தும் பணிகளையும் பிரிட்டானியா வேகப்படுத்தி வருகிறது.