6ஆயிரம் பேரை வேலையை விட்டு தூக்கும் சிஸ்கோ..
நெட்வொர்கிங்கில் மிகப்பெரிய நிறுவனமான சிஸ்கோ அண்மையில் தனது பணியாளர்களில் 7விழுக்காடு பேரை அதாவது 6 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் சிஸ்கோ நிறுவனம் மேற்கொள்ளும் 2 ஆவது சுற்று பணிநீக்கம் இதுவாகும். கடந்தாண்டு ஜூலையில் அந்நிறுவனத்தில் 84ஆயிரத்து 900 பேர் பணியில் இருந்தனர். கடந்த பிப்ரவரியில் அந்நிறுவனம் 4 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது. அந்நிறுவனத்தின் ஆண்டுக்கு ஆண்டு வருவாய் 13.64பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்து வருவதால் ஆட்குறைப்பு நடவடிக்கையில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
நிர்வாக மறுசீரமைப்பு நடவடிக்கையாக 1பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வரி மிச்சமாக இருக்கிறது. 700 முதல் 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பணிகள் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆட்களை குறைத்தாலும் நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சக் ராபின்ஸ் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிறுவனம் ஒதுக்கியுள்ளது. அண்மையில் கூட சைபர் பாதுகாப்பு நிறுவனமான ஸ்பலங்க் நிறுவனத்தை 28 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணம் கொடுத்து சிஸ்கோ நிறுவனம் வாங்கியது. அந்நிறுவனத்தின் முதல் காலாண்டில் 13.65-13.85 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருவாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.