அந்த ஒரு விஷயத்தில் கூட்டு சேரும் பங்காளிகள்!!!
பெரிய ஐடி நிறுவனங்களுக்கு பெருந்தொற்று காலகட்டத்துக்கு பிறகு பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது மூன்லைட்டிங் பிரச்சனை இதற்கு சில நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்தாலும் பெரும்பாலான நிறுவனங்கள் மூன்லைட்டிங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன . இந்த எதிர்ப்பு வரிசையில் ஐபிஎம் நிறுவனத்தின் இந்திய தலைவர் சந்தீப் படேலும் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதில் மூன்லைட்டிங் செய்வது பல்வேறு பிரச்சனைகளை எழுப்புவதாகவும் துவக்கம் முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சந்தீப், மூன்லைட்டிங் என்பது முறையற்ற, தொழில் தர்மத்துக்கு எதிரானது என்று மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐபிஎம் நிறுவனத்தின் வாயிலாக கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்திக்கொண்டு பிற நிறுவனங்களுக்காக வேலை பார்ப்பதை துளியும் ஏற்க முடியாது என்றும் அவர் தனது மின்னஞ்சல் கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதேபோன்ற மின்னஞ்சல்கள் விப்ரோ,இன்போசிஸ், டிசிஎஸ்,எச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் அனுப்பப் பட்டது குறிப்படத்தக்கது.
அண்மையில் மூன்லைட்டிங்கில் ஈடுபட்டதாக 300 பணியாளர்களை விப்ரோ நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்ததும் கூடுதல் கவனம் பெற்றது.மூன்லைட்டிங்கிற்கு பல நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் இன்போசிஸ் நிறுவனம் மட்டும் தனது பணியாளர்களுக்கு ஒரு சிறிய சலுகை அளித்துள்ளது. அதில் தனது போட்டி நிறுவனங்கள் தவிர்த்து வேறு எந்த நிறுவனத்துக்கு வேண்டுமானாலும் முன்கூட்டியே தங்களிடம் அனுமதி பெற்று gigபணிகளை செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது