டிவிட்டரில் விளம்பரம் செய்வதை நிறுத்தும் நிறுவனங்கள் …
டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அண்மையில்
வாங்கினார்.இதனையடுத்து பிரபல நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் டிவிட்டரில் பணம் செலுத்தி
விளம்பரப்படுத்தியதை நிறுத்துவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. ஏற்கனவே இருந்த டிவிட்டர் விதிகளுக்கும் புதிய விதிக்குமான மாற்றங்கள் குறித்து கேட்டு வருவதாகவும் ஜெனரல் மோட்டார்ஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விளம்பரம் செய்வதை நிறுத்தியுள்ள டிவிட்டர் நிறுவனம் வாடிக்கையாளர் சேவைகளை தொடர்ந்து டிவிட்டரில் அளிப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளது. டிவிட்டரின் இரண்டாவது காலாண்டில் 90 விழுக்காடு வருவாய் விளம்பரங்கள் வாயிலாகவே கிடைத்துள்ளது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளம்பர முகமை நிறுவனங்களும் டிவிட்டரின் வருங்காலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர் டிவிட்டரை வாங்கிய கையோடு, எலான் மஸ்க் , விளம்பரதாரர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் உலகில் எந்த பொருளும் இலவசமாக கிடைத்துவிடாது. ஆனால் டிவிட்டரில் நீங்கள் உங்கள் விருப்பப்படி விளம்பரம் அளித்து உங்கள் வணிகத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.