தொடரும் ஏற்றம்..
இந்திய பங்குச்சந்தைகள்,புதன்கிழமை ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்ந்து, 80,956புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 10 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 467 புள்ளிகளில் வணிகம் நிறைவுற்றது. HDFC Life, HDFC Bank, Apollo Hospitals, NTPC, Bajaj Finserv உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்தன. Bharti Airtel, Cipla, Bajaj Auto, Tata Motors, Adani Portsஉள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு பெரிதாக வீழ்ந்தன. ஆட்டோமொபைல், எப்எம்சிஜி உள்ளிட்ட துறை பங்குகள் 0.7விழுக்காடு சரிந்தன. தகவல் தொழில்நுட்பம், ஊடகத்துறை பங்குகள் 0.5 விழுக்காடும், ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கி பங்குகள் 2 விழுக்காடும் ஏற்றம் கண்டன. HEG, Affle India, Computer Age Management Services, Caplin Labs, City Union Bank, Coforge, Dixon Technologies, eClerx Services, Federal Bank, HDFC Bank, Indian Hotels, Info Edge, KEC International, Krishna Institute of Medical Sciences, Mastek, Medplus Health, Oberoi Realty, PB Fintech, Piramal Enterprises, Tech Mahindra உள்ளிட்ட 240க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. புதன்கிழமை ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி ஒரு கிராம் 7130 ரூபாயாகவும், ஒரு சவரன் 57,040 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி 100 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.