பங்குச்சந்தைகளில் தொடரும் சரிவு..
இஸ்ரேல் – ஈரான் சண்டை காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு தொடர்ந்தது. அக்டோபர் 4 ஆம் தேதி ஆசியப் பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 808 புள்ளிககள் சரிந்து 81 ,688 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியிலும் 200 புள்ளிகள் சரிந்து 25,049 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இந்திய சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு 3.99லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. M&M, Bajaj Finance, Nestle India, BPCL, Asian Paint உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரிய சரிவை கண்டன. Infosys, ONGC, Tata Motors, Wipro, HDFC Lifeஉள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. பொதுத்துறை வங்கிகள், தகவல் தொழில்நுட்பத்துறை மட்டுமே சற்று தாக்கு பிடித்து விளையாடின. ஆட்டோமொபைல், FMCG,ரியல் எஸ்டேட், ஆற்றல், ஊடகம், டெலிகாம், எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் மிகப்பெரிய சரிவை கண்டன. BASF India, Coforge, Colgate Palmolive, Dr Lal PathLab, Info Edge, JSW Steel, Jubilant Ingrevia, Lloyds Metals, Metropolis Healthcare, Polycab India, Whirlpool of India உள்ளிட்ட நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. புதன்கிழமை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை, வியாழக்கிழமை மேலும் 80 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளிக்கிழமை மீண்டும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒருகிராம் தங்கம் 10ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 120 ரூபாயாகவும், ஒரு சவரன் 56 ஆயிரத்து 960 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து புதிய உச்சமாக 103 ரூபாயை எட்டியுள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோ 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 1லட்சத்து 3 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரம் இருக்கும் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.